சென்னை மாநகராட்சியின் 134வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் தனது முதல் வெற்றியை பாஜக பதிவு செய்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உள்பட்ட 134வது வார்டில் பாஜக சார்பில் உமா ஆனந்தனும், காங்கிரஸ் சார்பில் சுசீலா கோபால கிருஷ்ணனும், அதிமுக சார்பில் அனுராதாவும் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது முதல் காங்கிரஸ் வேட்பாளர் சுசீலா கோபால கிருஷ்ணன் முன்னிலையில் இருந்து வந்தார். பின்னர் பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த உமா ஆனந்தன் 5,539 வாக்குகள் பெற்று 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சுசீலா 3,503 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அதிமுக வேட்பாளர் அனுராதா 2,695 வாக்குகள் பெற்று 3வது இடத்தைப் பிடித்தார்.