நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சுமார் 50 மாநகராட்சி வார்டுகளில் போட்டியிட்டது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு, மாலை 5 மணி நிலவரப்படி, 16 மாநகராட்சி வார்டுகளில் விடுதலை சிறுத்தைகள் வெற்றிபெற்றுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி 4-வது வார்டு ரவிவர்மா, மதுரை மாநகராட்சி 71-வது வார்டு இன்குலாப் என்ற முனியாண்டி, கும்பகோணம் மாநகராட்சி 24-வது வார்டு ரூபினிஷா, தஞ்சாவூர் மாநகராட்சி 14-வது வார்டு பாப்பா சொக்காரவி, திண்டுக்கல் மாநகராட்சி 28-வது வார்டு நடராஜன், சேலம் மாநகராட்சி 44-வது வார்டு இமயவர்மன், கடலூர் மாநகராட்சி 1-வது வார்டு செல்வ புஷ்பலதா, 4-வது வார்டு சரிதா, 34-வது வார்டு தாமரைச்செல்வன், திருச்சி மாநகராட்சி 3-வது வார்டு நா.பிரபாகரன் உட்பட 16 இடங்களில் விசிக வெற்றிபெற்றுள்ளது.
இதுதவிர 26 நகராட்சி வார்டுகள், 51 பேரூராட்சி வார்டுகளில் அக்கட்சி வெற்றிபெற்றிருப்பதாக விசிகவினர் உற்சாகமாகத் தெரிவிக்கின்றனர். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் வாக்களித்த மக்களுக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார்.