திண்டிவனம் நகர்மன்ற தலைவர் யார்? அடிக்குது ஜாக்பாட்...


திண்டிவனம் நகராட்சி

திண்டிவனம் நகர்மன்றத் தலைவராகும் கனவோடு களத்தில் குதித்த திமுக, அதிமுக வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவினர். திமுக நகராட்சியை பிடித்துள்ள நிலையில் வெற்றிபெற்ற வேறொரு பெண் வேட்பாளரை தேர்வுசெய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

திண்டிவனம் நகராட்சித் தலைவர் வேட்பாளரக அதிமுக சார்பில் 18-வது வார்டில், மாவட்ட பொருளாளரான வெங்கடேசன் மனைவி கே.வி.என்.சாவித்திரி, 20-வது வார்டில் திண்டிவனம் நகரச் செயலாளர் தீனதயாளன் மனைவி கஸ்தூரி ஆகிய இருவரில் ஒருவர் என அதிமுகவினர் சூசகமாக தெரிவித்தனர்.

திமுக சார்பில் நகராட்சி தலைவர் வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ சேதுநாதன் மனைவி அனுசுயா என மாவட்டச் செயலாளரான அமைச்சர் மஸ்தான் அறிவித்திருந்தார்.

ஆனால், இந்நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 24 வார்டுகளை திமுக மற்றும் கூட்டணிக்கட்சிகள் வென்றிருந்தாலும், தலைவர் வேட்பாளர் அனுசுயா சேதுநாதன் வெற்றி வாய்ப்பை இழந்தார். மேலும் அதிமுக சார்பில் தலைவர் வேட்பாளர்களாக போட்டியிட்ட கஸ்தூரி, சாவித்திரி இருவரும் வெற்றிவாய்ப்பை இழந்தனர்.

இதனால். தற்போது திமுகவில் வெற்றிபெற்றுள்ள வேறொரு பெண் வேட்பாளர், நேற்று முன்தினம்வரை கனவுகூட காணாதவர், தலைவராக உள்ளார். ஜாக்பாட் பரிசு பெறப்போகும் அவர் யார் என்ற விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

x