`பூஜ்யம்' வாக்கு- அனந்தபுரம் பேரூராட்சி பாஜக வேட்பாளர் அதிர்ச்சி


அனந்தபுரம் பேரூராட்சியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளருக்கு ஒரு வாக்குகூட பதிவாக வில்லை.

விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம் பேரூராட்சியின் 6 வார்டில் பாஜக சார்பில் 10 வார்டான சேர்ந்த நிரோஷா என்பவருக்கு பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. தேர்தல் முடிந்து இன்று செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்குகள் எண்ணப்பட்டது.

இதில் திமுகவைச் சேர்ந்த அக்‌ஷயா 135 வாக்குகளும், சுயேச்சையாக போட்டியிட்ட மஞ்சுளா 75 வாக்குகளும், மற்றொரு சுயேச்சை 11 வாக்குகளும் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த பத்மா 34 வாக்குகள் பெற்றனர். ஆனால் பாஜக சார்பில் போட்டியிட்ட நிரோஷா ஒரு வாக்கு கூட பெறவில்லை. சுயேச்சையாக போட்டியிட்ட மஞ்சுளா, இவருக்கு உறவினர் என்பதால் வாக்கு சேகரிக்கவரவில்லை. மேலும் அவர் போட்டியிட்ட வார்டில் அவருக்கே வாக்கு இல்லை என்று அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

x