குளச்சல் நகராட்சியைக் கைப்பற்றிய திமுக


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் நகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. இங்கு எந்தெந்த கட்சிகள், எத்தனை இடங்களில் வென்றுள்ளன என பார்க்கலாம்.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. இங்கு இப்போது வெளியாகி இருக்கும் முடிவுகளின் அடிப்படையில் திமுக 11 இடங்களில் வென்றுள்ளது. சுயேச்சைகள் 6 இடத்திலும், பாஜக 4 இடத்திலும் வென்றுள்ளனர். காங்கிரஸ் 2 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்தில் மட்டுமே வென்றுள்ளனர்.

இதனால் குளச்சல் நகராட்சியை காங்கிரஸ், சுயேச்சைகளின் ஆதரவுடன் மிக எளிதாக திமுக கைப்பற்றும் சூழல் எழுந்துள்ளது.

x