திருச்சி மேயர் வேட்பாளர் வெற்றி


அன்பழகன்

திருச்சி மாநகராட்சியின் திமுகவின் மேயர் வேட்பாளராக கருதப்படும் அன்பழகன், அமோக வெற்றி பெற்றுள்ளார்.

திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயரும், மாநகர திமுக செயலாளருமான அன்பழகன், திருச்சி மாநகராட்சி தேர்தலில் 27-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டார். அமைச்சர் நேருவின் தீவிர ஆதரவாளராகக் கருதப்படும் இவர்தான், திமுகவின் மேயர் வேட்பாளர் என்று அமைச்சர் நேருவே மறைமுகமாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திருச்சி மாநகராட்சி, 27-வது வார்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. திமுக மேயர் வேட்பாளராகக் கருதப்படும் அன்பழகன் 5,435 ஓட்டுகள் பெற்று, வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் காமராஜ் 611 ஓட்டுகள் மட்டுமே பெற்றார்.

அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதால் எதிர்த்துப் போட்டியிட்ட அனைவருக்கும் வைப்புத்தொகை பறிபோயுள்ளது.

x