கன்னியாகுமரி மாவட்டத்தில் இப்போதைய நிலவரப்படி மண்டைக்காடு, இரணியல் பேரூராட்சிகளை பாஜக கைப்பற்றியது.
தமிழகத்திலேயே பாஜக வலுவாக இருக்கும் மாவட்டங்களில் ஒன்று கன்னியாகுமரி. இங்கு நாகர்கோவில் மாநகராட்சித் தேர்தலை பெரிதும் நம்பியது பாஜக. ஆனால் நாகர்கோவில் மாநகரில் திமுக, காங்கிரஸ் கூட்டணியே கோலோச்சி வருகிறது. பாஜக எதிர்பார்த்த அளவிற்கு சோபிக்கவில்லை.
அதேநேரம் ஊரகப் பகுதிகளில் பல பகுதிகளிலும் பாஜக கணிசமான இடங்களைப் பெற்றுள்ளது. அதிலும், குமரி மாவட்டத்தில் இரணியல் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் பாஜக 12 இடங்களிலும், சுயேட்சைகள் இரு இடங்களிலும், நாம் தமிழர் கட்சி ஒரு இடத்திலும் வென்றுள்ளனர்.
இங்கு திராவிடக் கட்சிகளான திமுக, அதிமுக ஒரு வார்டில் கூட வெற்றிபெறவில்லை. இதேபோல் மண்டைக்காடு பேரூராட்சியையும் பாஜக கைப்பற்றியுள்ளது.