மதுரை மாநகராட்சியில் பாஜக 1, கம்யூனிஸ்ட் 2 வெற்றி


மதுரை மாநகராட்சியில், பாஜக 1, கம்யூனிஸ்ட் 2 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

மதுரை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளுக்கும் வேட்பாளர்களை இறக்கியது பாஜக. அதில் ஒரு வேட்பாளர் அதிமுகவில் சேர்ந்துவிட்டார். மீதியுள்ள 99 வேட்பாளர்களுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, நடிகர்கள் காயத்ரி ரகுராம், செந்தில் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர். மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் கடுமையாக உழைத்தார். நிறைய பணமும் செலவழித்தார்.

இந்நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் 86-வது வார்டில் பாஜக வேட்பாளர் பூமா ஜனாஸ்ரீ வெற்றிபெற்றார்.

இதேபோல மதுரையில் மொத்தம் 8 வார்டுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிட்டது. அவர்களுக்கு ஆதரவாக மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மதுரை எம்பி சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர். இதில், 56-வது வார்டில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஜென்னியம்மாளும், 23-வது வார்டு கம்யூனிஸ்ட் வேட்பாளர் குமரவேலும் வெற்றிபெற்றார்கள்.

x