வாக்கு எண்ணிக்கை மையத்தில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு


போராடும் பத்திரிகையாளர்கள்

மதுரை மாநகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று பாத்திமா கல்லூரி, வக்பு வாரியக் கல்லூரி, மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய 4 மையங்களில் நடைபெற்றுவருகிறது.

இதில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. தேர்தல் ஆணையம் பத்திரிகையாளர்கள் உள்ளே செல்லலாம் என்று கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டியும் அங்கிருந்து அலுவலர்களும், போலீஸாரும் அனுமதி மறுத்தார்கள். அதற்குள் வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிட்டதால், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் எந்த ஊரிலும் இல்லாத வகையில், மதுரையில் மட்டும் ஏன் இந்தத் தேவையற்ற கெடுபிடி என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். இதைத் தொடர்ந்து மதுரை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் அவர்களைச் சமாதானப்படுத்தினர். பின்னர் அவர்கள் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

x