குமரியில் 2 பேரூராட்சிகளில் வென்ற நாம் தமிழர்


குமரி மாவட்டத்தில், நாம் தமிழர் கட்சி 2 பேரூராட்சிகளில் தலா ஒரு கவுன்சிலர் இடங்களை வென்றுள்ளது. கிராமப்பகுதிகளில் நாம் தமிழர் கட்சி செல்வாக்கு பெற்றுவருவதையே, இது உணர்த்துகிறது.

கன்னியாகுமரி மாவட்டம், கப்பியறை பேரூராட்சியில் காங்கிரஸ் வேட்பாளரை விட 200 வாக்குகள் வித்தியாசத்தில் நாம் தமிழர் கட்சி வாகை சூடியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் சோபா ஆன்சி, 417 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இதன் மூலம் குமரியில் நாம் தமிழர் இந்தத் தேர்தலில் முதல்வெற்றியை பதிவு செய்தது.

அதன் தொடர்ச்சியாக, இப்போது கல்லுக்கூட்டம் பேரூராட்சியில் 8-வது வார்டை நாம் தமிழர் கட்சி கைப்பற்றியது. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கீதா மலர், திமுக வேட்பாளரை 147 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார்.

x