நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளில் உள்ள 291 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. உதகை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளுக்கான வாக்குப்பதிவை மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் ஆய்வு செய்தார்.
உதகை நகராட்சியில் முதல் சுற்றில் திமுக, அதிமுக மற்றும் காங்கிரஸ் தலா ஒரு வார்டில் வெற்றி பெற்றனர். உமா நித்திய சத்தியா (காங்கிரஸ்) -638 வெற்றி. கனகமணி (அ.தி.மு.க.)-159, பூர்ணிமா (பா.ஜ.க.)-52, சுயேச்சை வேட்பாளர்கள்- 4 பேர்
2வது வார்டில் நாகமணி (தி.மு.க.)-வெற்றி, சுயேச்சை வேட்பாளர்கள்-4 பேர் வெற்றி, 4வது வார்டில் திமுக வேட்பாளர் 605 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வெற்றி பெற்றவர்களுக்கு தேர்தல் நடத்தப் அலுவலர் காந்திராஜ் சான்றிதழ் வழங்கினார். கீழ்குந்தா தேர்வுநிலை பேரூராட்சி மூன்றாம் வார்டு திமுக வெற்றி நான்காம் வார்டு திமுக வெற்றி. ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் மகாதேவன் 38 விடுதலை சிறுத்தைகள் 387, ஷாஜி காங்கிரஸ் 37, கூடலூர் நடுவட்டம் பேரூராட்சியில் மகாதேவன் சுயேச்சை வேட்பாளர் வெற்றி. நீலகிரி மாவட்டம் உலிக்கல் பேரூராட்சியில் திமுக 3 வெற்றி சுயேட்சை 1 வெற்றி.