பாஜகவை பின்னுக்குத் தள்ளும் காங்கிரஸ்


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், தேசிய கட்சியான பாஜக தமிழ்நாடு முழுக்க தனித்தும், காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியிலும் களமிறங்கியது. இன்று காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்கு எண்ணிக்கையின்போது, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் காங்கிரஸின் வெற்றி பதிவாகிக்கொண்டிருக்கிறது.

நாகர்கோவில், திண்டுக்கல், ஓசூர் ஆகிய மாநகராட்சிகளில் மட்டுமே பாஜக தனது வெற்றிக்கணக்கைப் பதிவு செய்துள்ளது. அதேபோல தென்காசி, குமரி மாவட்ட பேரூராட்சிகளிலும் ஓரிரு இடங்களை பாஜக வென்றுள்ளது.

இதே நிலை நீடித்தால், ஒட்டுமொத்தமாக பாஜகவைவிட காங்கிரஸே முன்னிலை பெறும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

இதுகுறித்து பாஜகவினர் கூறும்போது, “காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டிருந்தால், பாஜகவைவிட மிக மோசமாகத் தோற்றிருக்கும். அல்லது பாஜக அதிமுக கூட்டணியில் போட்டியிட்டிருந்தால், குமரி, கோவை மாவட்டங்களில் இன்னும் அதிகமான இடங்களில் வெற்றியைப் பதிவுசெய்திருக்கும்” என்றனர்.

x