புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பேரூராட்சியை திமுக வெற்றிகரமாக கைப்பற்றியது. கீரமங்கலம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. அங்கு பதிவு செய்யப்பட்ட வாக்குகள் இன்று எண்ணப்பட்டு, அவற்றில் தற்போது வரை 10 வார்டுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதில், திமுக 7 இடங்களையும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ளனர். இதனால், பெரும்பான்மைக்குத் தேவையான 8 இடங்கள் திமுக கூட்டணிக்கு கிடைத்திருப்பதால், மேலும் வார்டுகள் எண்ணப்பட்டு வரும் நிலையிலேயே கீரமங்கலம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.