நாகர்கோவில் மாநகராட்சி: வார்டுகளை அள்ளும் தேசியக் கட்சிகள்


நாகர்கோவில் மாநகராட்சி

நாகர்கோவில் மாநகராட்சியில் தேசியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சிகளும் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகின்றனர். காலை 9.30 மணி நிலவரப்படி இதுவரை அறிவிக்கப்பட்ட வெற்றி பட்டியலிலேயே பாஜக இருவார்டுகளிலும், காங்கிரஸ் கட்சி இருவார்டுகளிலும் வென்றுள்ளனர்.

நாகர்கோவிலில் மொத்தமுள்ள 52 வார்டுகளில் திமுக, அதிமுக, பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. அதிமுகவும், பாஜகவும் தனித்து தேர்தலை சந்தித்தன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 13 வார்டுகள் ஒதுக்கப்பட்டன. மார்க்சிஸ்ட் கட்சி தனித்து தேர்தலை சந்தித்தது. சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக அளவில் திமுகவோடு கூட்டணி வைத்து, காங்கிரஸ் பலனை அறுவடை செய்தது போலவே, நாகர்கோவில் மாநகரிலும் காங்கிரஸ், திமுக கூட்டணிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி காங்கிரஸ் சார்பில் 3-வது வார்டில் போட்டியிட்ட அருள் சபிதா, செல்வகுமார் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இதேபோல் பாஜக மேயர் வேட்பாளராக முன்னிலைப்படுத்திய மீனாதேவ் உட்பட இருவர் வென்றுள்ளனர். திராவிடக் கட்சிகளுக்கு இணையாக நாகர்கோவில் மாநகராட்சியில் தேசியக் கட்சிகளும் கோலோச்சி வருவது கவனிக்கத்தக்கது. இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவில் திமுக 3 இடங்களில் வென்றுள்ளது.

x