தூத்துக்குடி மாநகராட்சியைக் கைப்பற்றும் திமுக


தூத்துக்குடி மாநகராட்சி

தூத்துக்குடி மாநகராட்சியில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி மொத்தமுள்ள 60 வார்டுகளில் திமுக 17 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 2 வார்டுகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

தூத்துக்குடியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில், பாஜக 45 வார்டுகளில் மட்டுமே போட்டியிட்டது. இதனால், மேயர் பதவியைக் கைப்பற்ற திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவியது. இதில் திமுகவின் மேயர் வேட்பாளராக சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவனின் சகோதரும், கலைஞரின் முரட்டு பக்தர் என அழைக்கப்பட்டவருமான பெரியசாமியின் மகன் ஜெகன் பெரியசாமியை முன்மொழிந்து, தேர்தலை சந்தித்தது திமுக. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் எஸ்.பி.எஸ்.ராஜா மேயர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்பட்டார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு பெரிய அளவில் இன்னும் எதிரொலித்திருப்பதைத்தான், வாக்குச்சாவடி முன்னிலை நிலவரம் காட்டுகிறது. அதிலும், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிர் இழந்த 13 பேரில் பத்து பேரது குடும்பம் மாநகரப் பகுதிக்குள்ளே வசிப்பதாலும், மக்கள் மத்தியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஆறாத வடுவாக பதிவாகி இருப்பதுமே இப்போதைய தேர்தல் நிலவரமாகத் தெரிகிறது.

x