மதுரை மாநகராட்சியில் வெற்றிக் கணக்கைத் தொடங்கியது திமுக


100 வார்டுகளைக்கொண்ட மதுரை மாநகராட்சியில், 77 வார்டுகளில் திமுக போட்டியிட்டது. இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்போது 70-வது வார்டு முடிவுகள் முதலில் வெளியாகின. அதில் திமுக வேட்பாளர் அமுதா தவமணி வெற்றிபெற்றார். இதன் மூலம் திமுக தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியிருக்கிறது. அதைத் தொடர்ந்து மேலும் 4 வார்டுகளில் திமுக வென்றது. மொத்த முடிவுகளும் மதியம் 3 மணிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர அலங்காநல்லூர், பாலமேடு, வாடிப்பட்டி பேரூராட்சிகளில் தலா 2 வார்டுகளில் திமுக வெற்றிபெற்றுள்ளது.

x