திருமங்கலம் மறுதேர்தலில் 73.5 சதவீத வாக்குப்பதிவு


தமிழகம் முழுவதும் 19ம் தேதி நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது, மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி 17வது வார்டுக்கு உட்பட்ட 17 டபிள்யு எனும் வாக்குச்சாவடியில் முறைகேடு புகார் காரணமாக, வாக்குப்பதிவு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. எனவே, இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. பெண்களுக்கான இந்த வார்டில், காலையில் இருந்தே வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். மொத்தம் 949 வாக்காளர்களில் 698 பேர் வாக்களித்தனர். இது 73.55 சதவீதமாகும்.

19ம் தேதி 640 வாக்குகள் பதிவாகியிருந்தால், இன்று அதைவிட வாக்குப்பதிவு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பலரும் வேலைக்குச் சென்றுவிட்டதால் எதிர்பார்த்த அளவு வாக்குப்பதிவாகவில்லை. நாளை நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின்போது இந்த வார்டுக்கான வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

x