விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியும் இல்லை, எந்த கட்சிக்கும் ஆதரவுமில்லை: தவெக அறிவிப்பு


சென்னை: 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட புகழேந்தி வெற்றி பெற்றார். அவர் கடந்த ஏப். 6-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.

இதனால் காலியான அத்தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதிஇடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. திமுக, பாமக, நாம் தமிழர் கட்சிகள் வேட்பாளரை அறிவித்துவிட்டன. அதிமுக தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், இடைத்தேர்தலில் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் நேற்று விடுத்த அறிக்கை:

2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளை மேற்கொண்டு, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் பணியாற்றுவதுதான் எங்களது பிரதான இலக்கு என்று ஏற்கெனவே கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உட்பட எந்தத் தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது.

வரும் ஜூலை 10-ல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக்கழகம் போட்டியிடாது. எந்த கட்சிக்கும் ஆதரவில்லை என்பதை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அறிவுறுத்தலின்பேரில் தெரிவித்துக் கொள்கிறேன்

x