சென்னையில் மந்தம்... நாமக்கல் முதலிடம்... தமிழக வாக்குப்பதிவு நிலவரம்!


தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பகல் 1 மணி நிலவரப்படி 35.34 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கரூர், நாமக்கல் மாவட்டங்களில் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என 648 நாகர்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி தொடக்கி நடைபெற்று வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சியில் சென்னை மாநகராட்சியில் மதியம் 1 மணி நிலவரப்படி 23.42% வாக்குகள் பதிவாகியுள்ளது. காலை 9 மணி வரை 3.96% வாக்குப்பதிவும், காலை 11 மணி வரை 17.88% வாக்குப்பதிவும் பதிவாகியிருந்த நிலையில் தற்போது மதியம் 1 மணிவரை 23.42% வாக்குகள் பதிவாகியுள்ளன.

சென்னையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சித்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் காலை 9 மணி நிலவரப்படி சென்னையில் மந்தமான வாக்குப்பதிவு நடந்து வந்தது. காலை 9 மணி நிலவரப்படி சென்னையில் 3.96% வாக்குப்பதிவும், தாம்பரத்தில் 3.30% வாக்குகளும் பதிவாகியுள்ளது. பெரும்பாலான வாக்கு சாவடிகளில் மக்களின் கூட்டம் பெரிதும் காணப்படவில்லை. எனினும் நேரம் நண்பகல் நெருங்க வாக்குப்பதிவு விறுவிறுப்படைந்துள்ளது. தொடந்து வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்காளர்கள் அதிக அளவில் வந்து தங்களின் வாக்குகளை பதிவு செய்து கொண்டிருக்கின்றனர்.

சென்னையில் மதியம் 1 மணி மாநிலவரப்படி 23.42 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் தமிழகத்தில் மொத்தமாக மதியம் 1 மணி நிலவரப்படி 35.34% வாக்குகள் பதிவாகியுள்ளது. நாமக்கல்லில் அதிகபட்சமாக 50.58% வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூர் மாநகராட்சி தேர்தலில் 46.04 சதவீகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டிலேயே குறைந்தபட்சமாக சென்னை மாநகராட்சியில் 23.42 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டிலேயே சென்னையில் வாக்குப்பதிவு தொடர்ந்து மந்தமாக காணப்படுகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் குறைந்த அளவாக 30.23 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கிறது.

x