எந்தெந்த பகுதியில் எத்தனை சதவீகிதம் வாக்குப்பதிவு!- முழு விவரம்


தேர்தல் ஆணையம் பழனிகுமார்

நகர்ப்புற உள்ளாட்சி 9 மணி நிலவரப்படி பதிவான வாக்குப்பதிவு விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 9 மணி நிலவரப்படி 8.21 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் பழனிகுமார் தெரிவித்துள்ளார். அதன்படி, சென்னையில் 3.96 சதவீதம், தூத்துக்குடியில் 9.81 சதவீதம், கன்னியாகுமரியில் 7.00 சதவீதம், திருவள்ளூரில் 6.25 சதவீதம், காஞ்சிபுரம் 11.02 சதவீதம், திருச்சியில் 13.00 சதவீதம், கிருஷ்ணகிரி 9.31 சதவீதம், பெரம்பலூர் 9.77 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது.

திருப்பூர் 8.09 சதவீதம், மதுரை 6.43 சதவீதம், சிவகங்கையில் 10.19 சதவீதம், தேனி 12.00 சதவீதம், ராமநாதபுரத்தில் 8.88 சதவீதம், தென்காசியில் 12.00 சதவீதம், நாகை 8.05 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. திருவாரூர் 10.25 சதவீதம், தஞ்சாவூரில் 6.01 சதவீதம், மயிலாடுதுறையில் 9.02 சதவீதம், சேலம் 12.97 சதவீதம், நாமக்கலில் 12.75 சதவீதம், கோவையில் 8.60 சதவீதம், வேலூரில் 8.82 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மாநகராட்சியை பொறுத்தவரை 1,99, 505 ஆண்கள், 2 லட்சத்து 15 ஆயிரத்து 357 பெண்கள் இதர 46 பேர் என மொத்தம் 4 லட்சத்து 14 ஆயிரத்து 908 வாக்காளர்கள் உள்ளனர். இன்று காலை 9 மணி நிலவரப்படி 34 ஆயிரத்து 362 பேர் வாக்களித்தனர். 8.61 சதவீதமக வாக்குப்பதிவு இருந்தது.

குடியாத்தம் நகராட்சி பகுதியில் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் ஓட்டு போட்டனர். காலை 9 மணி நிலவரப்படி இங்கு 10.18 சதவீதம், பேர்ணாம்பட்டில் 3.48 சதவீதம், ஒடுகத்தூர் பேரூராட்சியில் 15.28 சதவீதம், பள்ளிகொண்டா பேரூராட்சியில் 11.6 சதவீதம்,பென்னாத்தூர் பேரூராட்சியில் 14.02 சதவீதம் ,திருவலம் பேரூராட்சியில் 18.04 சதவீதம் வாக்குப்பதிவாகியிருந்தது" என்று தெரிவித்தனர்.

x