சென்னை வாக்காளர்களுக்கு பூத் சிலிப்புடன் வந்த பணம்!


பூத் சிலிப்புடன் வந்த பணம்

திருவான்மியூரில் பூத் சிலிப்புடன் வாக்காளர்களுக்கு அதிமுக பணம் வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் உள்ளிட்ட 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் திருவான்மியூரில் 179 வார்டுக்குட்பட்ட சிங்காரவேலன் நகரில் மாநகராட்சி பூத் சிலிப்புடன் அதிமுகவினர் பணம் வழங்குவதாக திமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். பணம் வழங்க முயன்ற அதிமுகவினரை பிடிக்கச் சென்றபோது அவர்கள் தப்பிச் சென்றுவிட்டதாகவும் திமுகவினர் புகார் கூறுகின்றனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் யார் பணம் வழங்கியது என விசாரித்து வருகின்றனர்.

x