உதயநிதியின் பேச்சும், இளங்கோவனின் அதிர்ச்சியும்!


எடப்பாடி பழனிசாமியுடன் இளங்கோவன்

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அருகே நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரான தமிழ்நாடு மாநில மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவன் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அதேவேளையில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், இளங்கோவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என பேசினார். இதைக்கேட்ட அதிமுகவினர், இது வழக்கமான மிரட்டல்தான் என நினைத்தனர். ஆனால், உதயநிதியின் பேச்சால் இளங்கோவனுக்கு உதறல் எடுத்துள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கார் ஓட்டுநரான கனகராஜ் உயிரோடு இருந்த சமயத்தில் இளங்கோவனும், கனகராஜூம் ஒன்றாக இணைந்து தங்களுக்கு நெருக்கமான ஜோசியர் ஒருவரிடம் ரகசியமாக ஜோசியம் பார்த்துள்ளனர். அந்த ஜோசியரை காவல்துறையினர் வளைத்து கொடநாடு கொலை, கனகராஜ் மர்ம மரணம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளனர்.

இதை வைத்தே உதயநிதி ஸ்டாலின் பேசினார். இந்த கைது படலத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடியும் உள்ளார். இதனால் இளங்கோனுக்கு உதறல் எடுத்துள்ளதாக அவருக்கு நெருக்கமான கட்சியினர் தெரிவித்தனர்.

x