அதிமுக முன்னாள் எம்.பி, சசிகலா புஷ்பாவுக்கு அவரது 2-வது கணவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் சசிகலா புஷ்பா. இவர், கடந்த 2018-ம் ஆண்டு தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு, இரண்டாவதாக வழக்கறிஞர் ராமசாமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதன் பின்னர் கடந்த 2020-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார் சசிகலா புஷ்பா.
இதனிடையே, சசிகலா புஷ்பாவின் படுக்கை அறைக்குள் மர்மநபர் இருந்ததாகவும், வீட்டில் ஆணுறை இருந்ததாகவும் பரபரப்பு புகார் கொடுத்தார் அவரது இரண்டாவது கணவர் ராமசாமி. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் விவாகரத்து கேட்டு சசிகலா புஷ்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ராமசாமி. அதில், சசிகலா புஷ்பா பலமுறை தகராறில் ஈடுபட்டதாகவும் இது தொடர்பாக டெல்லி, மதுரை, தூத்துக்குடி காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.