இன்று 4 மாவட்டம்; நாளை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!


மழை

4 மாவட்டங்களில் இன்றும், 3 மாவட்டங்களில் நாளையும், நாளை மறுநாள் 5 மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். பிப்ரவரி 18ல் தென் கடலோர மாவட்டங்கள், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூரில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

ஏனைய மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். பிப்ரவரி 19, 20ல் தென் மாவட்டங்கள், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும்; காலையில் சாலையில் பனிமூட்டம் காணப்படும். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவலோகம் பகுதியில் 5 செமீ மழையும், இரணியல், களியல், தக்கலையில் தலா 2 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

x