தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!


டாஸ்மாக் கடை

தமிழகத்தில் நாளை தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய உள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து 3 நாட்கள் மூடப்படுகிக்நக. இதனால் குடிமன்னர்கள், முன்கூட்டியே மதுபானங்களை வாங்கி வைக்க டாஸ்மாக் கடைகளில் குவியத் தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 22-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றைய தினமே அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக 19-ம் தேதி பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், தேர்தல் நடைபெறும் இடங்களில் வங்கிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் நாளை (பிப்.17) காலை 10 முதல் வரும் 19-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும் மற்றும் வரும் 22-ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளில் இருந்து, 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் டாஸ்மாக் மற்றும் பார்களை மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, நாளை முதல் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்படுகிறது. அதன்பிறகு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ள வருகிற 22-ம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. இதனால் குடிமன்னர்கள் டாஸ்மாக் கடைகளில் குவிந்து வருகின்றனர்.

x