தமிழகத்தில் எங்கெல்லாம் இன்று மழைக்கு வாய்ப்பு?


இன்றைய(பிப்.13) தினம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இவை தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தில், ‘தமிழகத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடனான லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்த மிதமான மழை புதுச்சேரி மற்றும் மற்றும் காரைக்காலின் சில இடங்களிலும் பெய்ய வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

இவற்றுக்கு அப்பால், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ’கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி’ ஆகிய மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இங்கே கனமழையுடன் சில இடங்களில் இடி மின்னலும் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர்த்த ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே தென்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x