கட்சி அலுவலகம் மீதான தாக்குதலைக் கண்டித்து மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் @ பாளையங்கோட்டை


திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் சாதி மறுப்பு - சமத்துவ திருமணத்தை ஆதரித்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீதான தாக்குதலை கண்டித்து அக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாளையங்கோட்டையில் லூர்துநாதன் சிலையருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில செயலர் கே. பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கே. கனகராஜ், மாவட்ட செயலர் கே. ஷ்ரிராம், மாநில குழு உறுப்பினர்கள் கே.ஜி. பாஸ்கரன், கே. கற்பகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலர் சடையப்பன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்ட செயலர் சுந்தர்ராஜன், மதிமுக மாநகர் மாவட்ட செயலர் கே.எம்.ஏ. நிஜாம், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ரவிக்குமார், திராவிட தமிழர் கட்சி தலைவர் வெண்மணி, தமிழ்ப் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன், ஆதிதமிழர் கட்சி தலைவர் ஜக்கையன், திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.