புதுச்சேரியில் தியாகி வ. சுப்பையா பிறந்ததின கொண்டாட்டம்


புதுச்சேரியில் தியாகி வ. சுப்பையா பிறந்ததின கொண்டாட்டம்

புதுச்சேரி மாநிலத்தில் மக்கள் தலைவர் என்று போற்றப்படும் வ.சுப்பையாவின் 111வது பிறந்த தினம் இன்று பல்வேறு தரப்பினராலும் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.

இந்தியாவின் தலைசிறந்த விடுதலை வீரர்கள் 97 பேரில் ஒருவர் என இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டவர். தன் வாழ்நாள் முழுவதும் பொது மக்களின் நலனுக்காக பாடுபட்டவர். புதுச்சேரி விடுதலை நாயகர், புதுச்சேரியில் முதன் முதலாக தொழிலாளர் இயக்கத்தை தோற்றுவித்தவர், ஆசிய கண்டத்திலேயே 8 மணி நேர வேலை உரிமையை பெற்றுத் தந்தவர் என்று பல்வேறு சிறப்புகளுக்கு உரியவர் புதுச்சேரியைச் சேர்ந்த தொழிற்சங்க வாதியான வ.சுப்பையா.

தியாகி சுப்பையா நினைவு இல்லம்

தனது மனிதாபிமானமிக்க சேவைகளால் மக்கள் தலைவர் என்று அழைக்கப்பட்ட சிறந்த கம்யூனிஸ்ட் தலைவர் வ. சுப்பையாவின் 111ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று புதுச்சேரி அரசு சார்பிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும், பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்வேறு தரப்பினராலும் சுப்பையாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் அவரது நினைவு இல்லத்தில் அவரின் நினைவை போற்றி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

x