தேர்தல் முகவர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் கண்டிப்பான உத்தரவு!


மாநில தேர்தல் ஆணையம்

‘நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முகவர்கள், மாநில தேர்தல் ஆணையம் அளித்துள்ள அடையாள அட்டையுடன் மத்திய அல்லது மாநில அரசு வழங்கிய புகைப்பட அடையாள அட்டையும் வைத்திருக்க வேண்டும்’ என மாநில தேர்தல் ஆணையம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாநில தேர்தல் ஆணையம் முகவர்களுக்கு வழங்கிய அடையாள அட்டையில் புகைப்படம் இடம்பெறாது என்பதால், இந்தப் புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அடையாள அட்டையுடன் மத்திய, மாநில அரசின் ஏதாவது ஒரு அடையாள அட்டை இருந்தால் மட்டுமே முகவர்கள் வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்படுவர் என மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கரோனா தொற்று காரணமாக, சென்னையில் கூடுதல் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்க மாநில தேர்தல் ஆணையம் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு மையமும், ஓரிரு மண்டலங்களுக்கு மட்டும் 2 மையங்கள் என 15 முதல் 20 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

x