மதுரை மாநகராட்சி தேர்தல்: சிபிஎம்முக்கு 8 வார்டுகள் ஒதுக்கீடு


மதுரை மாநகராட்சி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, மதுரை மாநகராட்சி வார்டுகளை ஒதுக்கீடு செய்வதற்காக திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையேயான பேச்சுவார்த்தை 2 நாட்களாக நடைபெற்றுவந்தது.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக கூட்டணியில் 8 வார்டுகள் ஒதுக்கீடு செய்வது என்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. இதன்படி, 23, 58, 63, 80, 83, 86, 88, 96 ஆகிய 8 வார்டுகள் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பேச்சுவார்த்தையில் திமுக சார்பில் மாவட்ட செயலாளர்கள் பொன். முத்துராமலிங்கம், வி.வேலுச்சாமி, சட்டப்பேரவை உறுப்பினர் கோ.தளபதி, முன்னாள் மேயர் பெ.குழந்தைவேலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.ராமகிருஷ்ணன், இரா.விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டு, வார்டு ஒதுக்கீடுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

x