"மத்திய அரசு இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டை பூஜ்ஜிய பட்ஜெட்" என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்ற மக்களவையில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. எனினும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரி விகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
இந்நிலையில், மத்திய பட்ஜெட்டை பூஜ்ஜிய பட்ஜெட் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். தனது ட்விட்டர் பதிவில், "மோடி அரசின் பூஜ்ஜிய பட்ஜெட். சம்பளம் பெறும் பிரிவினர், நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள், சிறுகுறு தொழில் முனைவோர்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு பட்ஜெட்டில் எந்த சலுகையும் இல்லை” என குற்றம்சாட்டியுள்ளார்.