"காரைக்குடி- எழும்பூர் பல்லவன் விரைவு ரயில் நாளை வழக்கம்போல் இயங்கும்" என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தண்டவாளம் பராமரிப்பு பணிகளை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது. குறிப்பாக, ஞாயிறு அன்று ரயில் சேவைகளை குறைத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே, பராமரிப்பு பணி காரணமாக காரைக்குடி ரயில் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே ஏற்கெனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில், காரைக்குடி- எழும்பூர் பல்லவன் விரைவு ரயில் நாளை வழக்கம்போல் இயங்கும் என்றும் சென்னை எழும்பூர்- மதுரை வைகை ரயில் நாளை வழக்கமான அட்டவணையில் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.