குவைத் தீ விபத்தில் உயிரிழந்த சின்னதுரை குடும்பத்தினருக்கு அரசு நிதி உதவி வழங்கல்


கடலூர்: காட்டுமன்னார்கோயில் அருகே குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு தமிழக அரசு அறிவித்த 5 லட்சம் நிதி உதவியை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் வழங்கினார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள முட்டம் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை (42). இவர் குவைத்தில் உள்ள தனியார் கம்பெனியில் ஸ்டோர் கீப்பராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் குவைத் தீ விபத்தில் உயிரிழந்துள்ளார். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவருக்கு திருமணமாகி 5 வருடம் ஆகிறது, சத்யா என்ற மனைவி உள்ளார் குழந்தைகள் கிடையாது.இந்த நிலையில் அவரது உடல் நேற்று முன்தினம் இரவு 12.30 மணி அளவில் முட்டம் கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டது.

உடலை பார்த்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். நேற்று (ஜூன்.15) காலை கடலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்
அ. அருண் தம்பு ராஜ், சிதம்பரம் சார் - ஆட்சியர் ராஷ்மி ராணிராஷ்மி ராணி ,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜராம் ஆகியோர் அவரது உடலுக்கு மலர் வளையும் வைத்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில் இன்று முட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் கடலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அ.அருண் தம்புராஜ் தலைமையில் வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் உயிரிழந்த சின்னதுறையின் தாயார் தாயா சரோஜாவிடம் ரூ.2.5 லட்சத்துக்கான காசோலையையும், சின்னதுரை மனைவி சத்யாவிடம் ரூ.2,5 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார். இந்நிகழ்வின் போது சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மி ராணி, காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் பலர் இருந்தனர்.