தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், 17 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
தாம்பரம் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக சிபிசக்ரவர்த்தியும், ஆவடி சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக மகேஷும், தாம்பரம் காவல் ஆணையரக, போக்குவரத்து துணை ஆணையராக குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தாம்பரம் காவல் தலைமையகம் மற்றும் நிர்வாகப் பிரிவு துணை ஆணையராக மூர்த்தியும், ஆவடி காவல் தலைமையகம் மற்றும் நிர்வாகப் பிரிவு துணை ஆணையராக உமையாளும், பரங்கிமலை காவல் துணை ஆணையராக பிரதீப்பும், சென்னை அண்ணாநகர் காவல் துணை ஆணையராக சிவபிரசாத்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தாம்பரம் தலைமையகம் நிர்வாகப் பிரிவு துணை ஆணையராக சுபலட்சுமியும், ஆவடி காவல் தலைமையகம் போக்குவரத்து துணை ஆணையராக எம்.எம்.அசோக்குமாரும், ஆவடி தலைமையம் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக பெருமாளும், சென்னை உளவுத்துறை துணை ஆணையராக பாலசுப்பிரமணியனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.