வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தது எஸ்பிஐ!


பாரத ஸ்டேட் வங்கி

தனது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில் எஸ்பிஐ வங்கி புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களின் மின்னணு பரிவர்த்தனைகளை ஊக்கப்படுத்த அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "எஸ்பிஐ வங்கியில் ஐஎம்பிஎஸ் எனப்படும் உடனடி பரிவர்த்தனையின் மூலம் மின்னணு முறையில் ரூ.5 லட்சம் வரை அனுப்பலாம். இதற்கு சேவைக்கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இருந்த மின்னணு முறையில் ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக ஆன்லனில் அனுப்பலாம் என்ற அறிவிப்பு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதேபோல், வாடிக்கையாளர்கள் இன்டர்நெட் பேங்கிங், யோனோ செயலி உள்ளிட்டவை மூலம் ஐஎம்பிஎஸ் முறையில் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். வங்கிக் கிளைகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும்போது ரூ.5 லட்சம் வரை ரூ.20 சேவைக் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும். வாடிக்கையாளர்கள் என்இஎஃப்டி முறையில் ரூ.2 லட்சம் வரையிலும், ஆர்டிஜிஎஸ் முறையில் ரூ.5 லட்சம் வரையிலும் மின்னணு முறையில் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்" என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், மூத்த குடிமக்களுக்கான பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வட்டியை உயர்த்தி அறிவித்துள்ள எஸ்பிஐ, இந்த மாற்றம் ஜனவரி 15 முதல் அமலுக்கு வந்துள்ளது. எஸ்பிஐ வீகேர் ஸ்பெஷல் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு இன்னும் கூடுதலாக 0.5% வட்டி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

x