12 பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் ரத்து!- உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


உச்சநீதிமன்றம்

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் இருந்து பாஜக எம்எல்ஏக்கள் 12 பேரை ஓராண்டுக்கு சபாநாயகர் சஸ்பெண்ட் செய்தது செல்லாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத் தொடரின்போது ஓபிசி இட ஒதுக்கீடு குறித்து எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ.க்கள் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டதோடு, சபாநாயகர் பாஸ்கர் ஜாதவை தாக்க முயன்றனர்.

இதைத் தொடர்ந்து, பாஜக எம்எல்ஏக்கள் அடுல் பாட்கால்கர், ராம் சத்புதே, ஹரிஷ் பிம்பாலே, பண்டி பாங்டியா, சஞ்சய் குடே, ஆஷ்ஸ் ஷெல்லர், பராக் அலாவனி, யோகேஷ் சாகர், அபிமன்யு பவார், ஜெய் குமார் ராவத், நாராயண் குச்சே, கிரிஷ் மகாஜன் ஆகிய 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்

சபாநாயகரின் இந்த சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 12 எம்எல்ஏக்களும் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பித்த உச்சநீதிமன்றம், 12 எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட் செய்து வெளியிட்ட தீர்மானம் தன்னிச்சையாகவும் அரசிலமைப்பிற்கு எதிராகவும் வெளியிட்டதாகக் கூறி அதை ரத்து செய்ததோடு, இவ்வாறு சஸ்பெண்ட் செய்வது அவை வெளியேற்றத்தைவிட மோசமானது” என்று கூறியுள்ளது.

x