நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருக்கும் நிலையில், தேர்தல் தேதியை இன்று மாலை 6.30 மணிக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வந்த நிலையில், தமிழகத்தில் கரோனா 3-வது அலை தீவிரமாக உள்ளதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரி டாக்டர்கள் நக்கீரன், பாண்டியராஜ் உள்பட சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடையில்லை என உத்தரவிட்டு மனுவை நேற்று தள்ளுபடி செய்தது. இதனால், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு இருந்த தடை நீங்கியதால், தேர்தல் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதியை இன்று மாலை 6.30 மணிக்கு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவிக்க உள்ளார்.