பாஜகவில் இணைந்த காங்கிரஸ் மூத்த தலைவர்: கோவா அரசியலில் பரபரப்பு!


பிப்ரவரி 14-ல் கோவா சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜோசப் ராபர்ட் செக்யூரா, இன்று பாஜகவில் இணைந்திருக்கிறார்.

கலங்குட் பஞ்சாயத்துத் தலைவராக மூன்று முறை பொறுப்பு வகித்த ஜோசப் ராபர்ட், காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு கொண்ட தலைவர்களில் ஒருவர். இந்நிலையில், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்தின் முன்னிலையில் பாஜகவில் அவர் சேர்ந்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. “ஜோசப் ராபர்ட்டின் வருகையால் கலங்குட் தொகுதியில் பாஜக பலம் பெற்றிருக்கிறது. நிச்சயமாக இந்தத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும்” என பிரமோத் சாவந்த் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

கலங்குட் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் ஜோசப் ராபர்ட் போட்டியிடுவார் என்றே தெரிகிறது. இந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மைக்கேல் லோபோவை எதிர்த்து அவர் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவில் சேர்வதற்கு முன்பாகவே இது குறித்து தனது விருப்பத்தையும் அவர் வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

x