தமிழக மீனவர்கள் 55 பேரை விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்!


தமிழக மீனவர்கள்

இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்கள் 55 பேரையும் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 18 மற்றும் 20-ம் தேதிகளில் மீன்பிடிக்க சென்றபோது எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 55 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக்கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை, ராமேஸ்வரம் பகுதிகளைக் சேர்ந்த 55 மீனவர்களை விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, மீனவர்கள் விரைவில் தமிழகம் வர உள்ளனர். மீனவர்களின் விடுதலையால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

x