அமைச்சர் சிவசங்கருக்கு கரோனா தொற்று


சிவசங்கர்

தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கா.சி.சிவசங்கருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை மிக வேகமாகப் பரவிவருகிறது. முந்தைய அலைகளோடு ஒப்பிடுகையில் பெரும்பான்மையானவர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதால் பாதிப்பினை எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெற்றுள்ளனர். இதனால் மருத்துவமனை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. எனினும் கரோனா கரோனா பரவல் வேகம் அதிகரித்து வரும் நிலையில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கரும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொற்று ஏற்படுவது இது இரண்டாவது முறை.

இதுகுறித்து அமைச்சர் சிவசங்கர் தன் முகநூலில், ‘மீண்டும் கரோனா. உடல் சோர்வு, சளி, காய்ச்சலைத் தொடர்ந்து கடுமையான தொண்டை வலி ஏற்பட்டதால் சோதனை செய்து கொண்டேன். மீண்டும் கரோனா. தொண்டை வலி காரணமாக பேச இயலாததால் அலைபேசியை அணைத்து வைத்துள்ளேன். சமீபத்தில் என்னை சந்தித்தவர்கள், முன்பாதுகாப்பாக இருக்க வேண்டுகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

x