10 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை!


அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு.

கரோனா பெருந்தொற்று காரணமாக 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, தற்போது 10 முதல் 12 வரையிலான வகுப்புகள் மட்டும் நடத்தப்பட்டுவருகின்றன.

இந்நிலையில், கரோனா பரவல் அதிகரித்திருப்பதால் மாணவர்களின் நலன் கருதி, ஜனவரி 31-ம் தேதி வரை 10,11 மற்றும் 12 உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

மேலும், ஜனவரி 19-ம் தேதி தொடங்கி, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு நடக்கவிருந்த திருப்புதல் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் எனத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x