முக்கிய 8 நகரங்களை இணைக்கும் விமான சேவை: மத்திய பிரதேச முதல்வர் தொடங்கி வைத்தார்


போபால்: மத்திய பிரதேசத்தின் முக்கிய 8 நகரங்களை இணைப்பதற்கான விமானச் சேவையை மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பிஎம் ஸ்ரீ பர்யதன் வாயு சேவா என்ற பெயரில் மாநிலங்களுக்கு இடையிலான விமான சேவையை விரிவாக்கம் செய்ய மத்திய பிரதேச முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்த வகையில், இம்மாநிலத்தின் போபால், இந்தூர், ஜபல்பூர், குவாலியர், உஜ்ஜைன், ரேவா, கஜுராஹோ மற்றும் சிங்காலி நகரங்கள் விமான சேவை மூலம் இணைக்கப்பட உள்ளன. அந்த வகையில் போபாலில் இருந்து ஜபல்பூருக்கு செல்லும் முதல் விமானத்தை மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும், பயணிகளுக்கான அனுமதி சீட்டுகளை வழங்கிய அவர் டிக்கெட் முன்பதிவு கவுன்ட்டரையும திறந்து வைத்தார். இந்த வழித்தடங்களில் விமான சேவையை அதிகரிக்க விமான கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

x