ரவுடிகளுக்கு உதவியதாக 3 ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்


டிஜிபி சைலேந்திரபாபு

ரவுடிகளுக்கு பல்வேறு வகையில் உதவி செய்து வந்த, காவல் ஆய்வாளர்கள் 3 பேரை பணியிட மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

சென்னையை அடுத்த படப்பை பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி படப்பை குணாவுக்கு, காவல் ஆய்வாளர்கள் சிலர் பல்வேறு வகையில் உதவி செய்து வந்ததாக டிஜிபிக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து ரவுடி படப்பை குணாவுக்கு உதவி செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான 3 ஆய்வாளர்களை, தெற்கு மண்டலத்துக்குப் பணியிட மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த மகேஷ்வரி, ஸ்ரீபெரும்புதூர் ஆய்வாளராகப் பணியாற்றிய ராஜாங்கம், மணிமங்கலம் ஆய்வாளர் பாலாஜி ஆகிய 3 ஆய்வாளர்களை தெற்கு மண்டலத்துக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

x