"பதவி ஏற்றுக்கொண்ட முதல் தற்போது வரை 2,619 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளேன். லட்சக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்பை ஒற்றை கையெழுத்தில் நிறைவேற்றினோம். கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “மக்களோடு வாழ் என்ற பேரறிஞர் அண்ணா சொன்ன வழியில், முத்தமிழறிஞர் கலைஞர் பழக்கியபடி உங்களுக்கு உழைக்கவே காத்திருக்கிறேன் என்று உறுதிகூறி இதுவரையிலான என்னுடைய செயல்பாடுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்
முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் 5 முக்கிய திட்டங்களுக்கு கையெழுத்திட்டேன். நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். 12.15 கோடி குடும்பங்களுக்கு கரோனா நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இல்லம் தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம் திட்டங்கள் மூலம் மக்கள் பயன் அடைந்துள்ளனர். அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது. மாநிலம் முழுதும் நலத்திட்டங்கள் சேரும் வகையில் செயல்பட்டு வருகிறோம்.
வாக்குறுதி அளித்த திட்டங்கள் மட்டுமின்றி சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றுகிறோம். வெளிப்படையான நிர்வாகத்தை திமுக அரசு நடத்தி வருகிறது. பதவி ஏற்றுக்கொண்ட முதல் தற்போதுவரை 2,619 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளேன். லட்சக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்பை ஒற்றைக் கையெழுத்தில் நிறைவேற்றினோம். கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். எங்கள் செயல்பாடுகளுக்கான ஆதாரம் பொதுவெளியில் இருக்கின்றது” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.