தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு விண்ணப்பிக்க அழைப்பு


சென்னை: தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசுநேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2023-ம் ஆண்டில் (1.1.2023 முதல் 31.12.2023 வரை) தமிழில் வெளியிடப்பட்ட நூல்கள், மரபுக்கவிதை, புதுக்கவிதை, சிறுகதை, சிறுவர் இலக்கியம், புதினம், திறனாய்வு, நாடகம், உள்பட33 வகைப்பாடுகளின் கீழ், பரிசுப்போட்டிக்கு வரவேற்கப்படுகின்றன.

போட்டிக்கான விண்ணப்பம் மற்றும் இதர விதிமுறைகள் அடங்கிய விவரங்களை www.tamilvalarchithurai.org/siranthanool என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விண்ணப்பத்துடன் 5 நூற்படிகளும் போட்டிக் கட்டணம் ரூ.100-யும் (“தமிழ் வளர்ச்சி இயக்குநர், சென்னை“ என்ற பெயரில் வங்கிக் கேட்புக் காசோலை) இணைத்து தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி வளாகம் முதல் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை 600 008 என்ற முகவரிக்கு ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 044 - 28190412, 28190413 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x