சர்வதேச பிளாஸ்டிக் கண்காட்சி சென்னையில் இன்று தொடக்கம்


சென்னை: சர்வதேச பிளாஸ்டிக் கண்காட்சி சென்னை வர்த்தக மையத்தில் இன்று தொடங்குகிறது. வரும் 17-ம் தேதி வரையில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில், 300-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் இந்தக் கண்காட்சியை நடத்துகிறது.

பிளாஸ்டிக் தயாரிப்பு தொடர்பான இயந்திரங்கள், அச்சுகள், உபகரணங்கள் உள்ளிட்டவை இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இந்த கண்காட்சிக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இலங்கை,வியட்நாம், மலேசியா, மியான்மர், கென்யா ஆகிய நாடுகளில் இருந்தும் 40,000-க்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகைதருவர் என்றும் இக்கண்காட்சியின் மூலம் ரூ.1,000 கோடிக்குஇயந்திரங்கள் விற்பனை செய்யப்படும் என்றும் எதிர்பார்ப்பதாக தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.