மதுரை மக்களவைத் தொகுதியில் மூன்று முறை எம்.பி.யாக வெற்றிபெற்றவர் ஏ.ஜி.எஸ்.ராம்பாபு. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த இவர், இன்று இரவு காலமானார். அவருக்கு வயது 60. இவரது தந்தை ஏ.ஜி.சுப்புராமன் மதுரையில் இருமுறை எம்பியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தந்தையைப் போலவே காங்கிரஸ்காரராக இருந்தவர், ஜி.கே.மூப்பனார் மீது கொண்ட பற்றால், த.மா.காவில் இணைந்தார். இப்போதும் அவர் ஜி.கே.வாசனின் த.மா.காவில்தான் இருந்தார். சவுராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்த அவரது மறைவுக்கு மதுரை மக்களும், அரசியல் பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.