தனியார் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர் பற்றி அவதூறு கருத்து பதிவிட்ட நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தேசிய மகளிர் ஆணையம் தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளது.
நடிகர் சித்தார்த் தனது சமூக வலைதளப்பக்கத்தில், தனியார் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர் ஒருவர் பற்றி அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளை பதிவிட்டுள்ளார். இதை அடுத்து பெண் தொகுப்பாளர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளைப் பதிவிட்ட நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அக்கடிதத்தில், ‘நடிகர் சித்தார்த் பதிவிட்ட கருத்துகள் பெண்களை அவமரியாதையாகவும், இழிபடுத்தும் வகையில் உள்ளதாலும் அவர்மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
நடிகர் சித்தார்த் நேற்று தனது சமூக வலைதளப் பக்கத்தில், பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்டதை அடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மகளிர் ஆணையர், மகாராஷ்டிரா காவல் துறைக்கு கடிதம் அனுப்பிய நிலையில், இன்று தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.