முழு ஊரடங்கு நாளில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்குச் செல்ல அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கரோனா பரவல் அதிகரித்து வருவதால், அரசு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்கெனவே திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி உண்டு. நிகழ்ச்சிக்குச் செல்வோர் திருமண அழைப்புகளைக் காண்பித்து தங்களது பயணங்களை மேற்கொள்ளலாம்.
அதேநேரத்தில், திருமண மண்டபத்தில் 100 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். முழு ஊரடங்கு நாட்களில் நடைபெறும் திருமணம் போன்ற விழாக்களுக்கு செல்வோருக்கு காவல் துறை அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.