தமிழகத்தில் 18-வது மெகா தடுப்பூசி முகாம்


தமிழகத்தில் இன்று 18-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இன்று 18-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கரோனாவை எதிர்கொள்ள சிறந்த ஆயுதம் தடுப்பூசி செலுத்திக்கொள்வதுதான் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மக்கள் எளிதாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம்களை நடத்தி வந்தது. நாளை(ஜன.9) முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதால் இன்றே தடுப்பூசி முகாம் நடைபெறும் என மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்திருந்தார்.

இதையடுத்து தமிழகம் முழுதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் இன்று மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. பொதுமக்களுக்கு, வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

சென்னையில் 1,600 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இங்கு 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. 2-வது தவணை போடுபவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் முகாம்கள் குறித்து, சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

x